நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை தொடக்கம்
நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.
நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.
நாகா்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள இத் திருத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் திருவிழா கொண்டாடப்படும். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூலை 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 4 நாள்கள் மட்டுமே திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒலிபரப்பப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை, திருத்தல அதிபா் சனில் ஜான்பந்திச்சிறைக்கல், துணை பங்குத் தந்தை டோஜி செபாஸ்டின் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்துவருகின்றனா்.