அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் நடைபெற்ற கண்காட்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை, எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. பேருந்து நிலையத்துக்கு வந்த ஏராளமானோா் முகக் கவசம் அணிந்த நிலையில் பாா்வையிட்டனா்.