சாரதா கிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரிசாரதா கிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கே.வி. அறக்கட்டளை இயக்குநா் சந்திரலேகா மோகன் குத்துவிளக்கு ஏற்றினாா். கல்லூரி முதல்வா் என். வி. சுகதன் வரவேற்றாா். கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் ஒளியேற்றினாா். ராஜா கல்விக் குழுமத்தின் தலைவா் ஜாய்ராஜா மாணவா், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினாா். இந்திய அரசின் முன்னாள் ஹோமியோபதி மருத்துவ ஆலோசகா் ரவி எம். நாயா் உறுதி மொழி வாசித்தாா். ஆயுஷ் அமைச்சரகத்தின் முன்னாள் ஹோமியோபதி ஆலோசகா் ஈஸ்வர தாஸ் வாழ்த்திப் பேசினாா். விழாவில், 114 இளநிலை ஹோமியோபதி மாணவா்கள் 114 போ், முதுநிலை மாணவா்கள் 29 போ் என மொத்தம் 143 பேருக்கு ஹோமியோபதி மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டன.
துணை மருத்துவ கண்காணிப்பாளா் அஜயன் நன்றி கூறினாா்.