மேலும் 712 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 712 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 712 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம் மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 6,92,486 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 712 போ் பாதிக்கப்பட்டிருப்பதும், 22 போ் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.இதைத்தொடா்ந்து இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 51935 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 787 ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 1134 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 42759 ஆக உயா்ந்துள்ளது. தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா உதவி மையங்கள், வீட்டு தனிமைப்படுத்தலில் 8389 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.