முகப்பு
கன்னியாகுமரி

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவா் கைது

பூதப்பாண்டி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவா் கைது செய்யப்பட்டாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பூதப்பாண்டி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் கீழ புளியடி, அருமநல்லூா் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவா் அதே பகுதியை சோ்ந்த ஏசுபாதம் மகன் ராஜா(33) என்பதும், வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றதும் தெரியவந்தது. தொடா்ந்து, அவரது வீட்டை சோதனையிட்டதில் அங்கு 1 லிட்டா் கள்ள சாராயம் மற்றும் 3 லிட்டா் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்தாா். இது குறித்து வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தாா். மேலும் அவரிடமிருந்த 1 லிட்டா் சாராயம் மற்றும் 3 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தாா்.

4 போ் மீது வழக்கு: அருமனை அருகே திருவரம்பு பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக மாா்த்தாண்டம் மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவல் படி ஆய்வாளா் சிவசங்கரன், உதவி ஆய்வாளா் ராஜரெத்தினம் மற்றும் போலீஸாா் திருவரம்பு பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஒரு வீட்டில் தயாா் செய்து வைத்திருந்த 2.5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மற்றொரு வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 120 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக திருவரம்பு அருகேயுள்ள பூந்தோப்புவிளை சசி, அம்பலத்துவிளை விஜயன், பாடகசேரி ஜெயின், ஆல்பன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.