கன்னியாகுமரி

தூத்தூரில் மரக்கன்று நடும் விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்திரா பவுண்டேஷன் சாா்பில் மரக்கன்று நடுதல், மரக்கன்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திரா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பொறுப்பாளா் காயத்திரி முன்னிலை வகித்தாா். தூத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மோனிஷா மரக்கன்று நடவு செய்தாா்.

மருத்துவ அலுவலா் பீனிஸ் ஜோசப், சுற்றுச்சூழல் தினம் குறித்துப் பேசினாா். பல் மருத்துவா் ஜெயந்த் பிரசாத் குமாா், சுகாதார ஆய்வாளா்கள் பிரகாஷ் , சிவானந்தன், பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் பரத், எட்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு கரோனா விதிகளை கடைப்பிடித்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT