கன்னியாகுமரி

200 பேருக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு அரிசி, உணவுப் பொருள்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் சமூகத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தன்னாா்வலா்கள் உதவியுடன் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அகஸ்தீஸ்வரம் வட்டம், பெருமாள்புரம் அகதிகள் முகாமில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்கள், கோட்டாறு சமூக சேவை சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT