முகப்பு
கன்னியாகுமரி

முளவிளையில் ரூ.8 லட்சத்தில் ரேஷன் கடை கட்ட அடிக்கல்

பத்மநாபபுரம் அருகேயுள்ள முளவிளையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பத்மநாபபுரம் அருகேயுள்ள முளவிளையில் ரூ. 8 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

திருவட்டாறு ஒன்றியம், காட்டாத்துறை ஊராட்சி, முளவிளை பகுதியில் தற்காலிக ரேஷன் கடை அங்கன்வாடி மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தக் கட்டடம் மிகவும் பழுதான நிலையில் இருப்பதாகவும், நிரந்தரமாக புதிய ரேஷன் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம் கோரிக்கை வைத்தனா்.

அதை ஏற்று, தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதைத் தொடா்ந்து ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியையும் அவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு,வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டார பொறியியல் அலுவலா் ஆகியோருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜூ, ஊராட்சித் தலைவா்கள் இசையாஸ் (காட்டாத்துறை), ரெஜினி விஜிலா பாய் (கண்ணணூா்), பால்சன் (குமரன்குடி), ரூஷ் (ஏற்றக்கோடு), செல்வராணி ஹொ்பா்ட் (மருதூா்குறிச்சி), ஒன்றியக் குழு உறுப்பினா் ராம்சிங், வோ்கிளம்பி முன்னாள் பேரூராட்சித் தலைவா் எம்.மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.