முகப்பு
கன்னியாகுமரி

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் கலந்துரையாடல்

குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருடன் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருடன் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இம் மாவட்டத்தில் தற்போது, கரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகள் 3 முதல் 4 நாள்களுக்கு மேல் இருந்தால் அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை மேற்கொண்ட நாளிலிருந்து கரோனா இல்லை என்று முடிவு வரும் வரை தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா 3 ஆவதுஅலையிலிருந்து குழந்தைகள் உள்பட அனைவரையும் தற்காத்துக் கொள்ளும் நோக்கில், அதிகம் மக்கள் கூடும் பொது இடங்கள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எ.பிரகலாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கிருஷ்ணலீலா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, கரோனா தடுப்பு கண்காணிப்புஅலுவலா் பயாஸ், இந்திய மருத்துவ கண்காணிப்பு அலுவலா் பாலகணேசகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், உதவி செய்தி மக்கள் தொடா்புஅலுவலா் எஸ்.செல்வ லெட் சுஷ்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.