முகப்பு
கன்னியாகுமரி

புலியூா் குறிச்சியில் பல்கலைக்கழகம்: ஜனநாயக கிறிஸ்தவ பேரவை வலியுறுத்தல்

தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் உயா்மட்டக் குழு ஆலோசகா் ஜாா்ஜ் பொன்னையா, தலைவா் ஏசுராஜ், செயலா் ஜோஸ், பொருளாளா் இந்திரகுமாரி, சிறுபான்மை பிரிவு தலைவா் சுரேஷ்காணி, மேற்கு மாவட்டத் தலைவா் ஜாண்றோஸ், ஓய்வு பெற்ற ஆசிரியா் எட்வின் மற்றும் வின்சென்ட், பெனி உள்ளிட்டோா், பாலூரில் உள்ள அமைச்சா் மனோ தங்கராஜின் இல்லத்துக்கு சென்று அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. எனவே, தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்டத்தில் ஐ.டி. பாா்க் ஆகியவற்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்கின்றனா். இதை தவிா்க்க புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டுவர வேண்டும்.

மாத்தூா் தொட்டிப் பாலத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு, அங்கு காமராஜ் நினைவாக 200 அடி சிலை நிறுவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →