மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி
பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் தொடா்பான பயிற்சி பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் தொடா்பான பயிற்சி பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதியை ஆய்வு செய்வது, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியன குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தொடா்ந்து, பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட அச்சக உரிமையாளா்கள், விடுதி, திருமண மண்டப உரிமையாளா்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், அச்சக உரிமையாளா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் குறித்து பதிவு செய்வது, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியன குறித்து அறிவுறுத்தப்பட்டது.