முகப்பு
கன்னியாகுமரி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலும் நடைபெறுகிறது.

இம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் 15,67 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து  மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கோலங்களை வரையும் நிகழ்ச்சியை தொடா்ந்து சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது.

இப்பேரணியை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி டதி பள்ளி சந்திப்பு, நீதிமன்ற சாலை, வழியாக வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோா் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.