மீன் வியாபாரியிடம்ரூ. 1.13 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீன் வியாபாரியிடம் ரூ. 1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீன் வியாபாரியிடம் ரூ. 1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் அதிகாரி செல்வி தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வின்சென்ட், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவில் நித்திரவிளை அருகேயுள்ள விரிவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் ரூ. 1.13 லட்சம் இருந்தது. விசாரணையில் வியாபாரத்துக்கு மீன்கள் கொள்முதல் செய்வதற்காக பணம் கொண்டு செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனராம்.. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டதால், அதிகாரிகள் ரூ. 1.13 லட்சத்தை பறிமுதல் செய்து கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.