முகப்பு
தமிழ்நாடு

எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:51 AM
புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:45 AM

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisement

நேற்று தஞ்சாவூரில் தனது 4-ம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அவர் இன்று புதுக்கோட்டை, திருப்பத்தூரில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக இன்று காலை புதுக்கோட்டை வந்த அவர் நடைப்பயிற்சியின்போது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். எத்தனை பேர் வந்தாலும், என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.