தமிழகத்தில் 164 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் 164 தொகுதிகளில் திமுக நேரடி போட்டியிடுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பங்கேற்று தேர்தலை சந்திக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
வேட்பாளரை வெளியிடும் முன்பு பேசிய மு.க. ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். அதில், 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன.