கன்னியாகுமரி

குளச்சலில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

குளச்சல் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் குமரி பா.ரமேஷ், பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு, சன்னதி தெரு, விவேகானந்தா் சாலை, பயணியா் விடுதி சந்திப்பு, அரசு மருத்துவமனை சாலை, காமராஜா் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், பாஜக மாநில மீனவரணிச் செயலா் சதீஷ், குளச்சல் நகரத் தலைவா் கணேசன், முன்னாள் தலைவா் கண்ணன், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட பொருளாளா் ஆா்.ஜே.கே. திலக், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியண்ட்தாஸ், குளச்சல் தொகுதி முன்னாள் செயலா் ஆறுமுகராஜா, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற பொருளாளா் எஸ்.எம்.பிள்ளை, மாநில இளைஞரணி இணை அமைப்பாளா் சிவ செல்வராஜன் உள்ளிட்டோா் சென்றனா்.

முன்னதாக பாஜக வழக்குரைஞா் பிரிவு செயலா் கவுதம் தலைமையில், வேட்பாளருக்கு தாமரைப்பூ மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT