ரோஜாவனம் கல்லூரி 100 சதவீதம் தோ்ச்சி
நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் அரசு தோ்வில் தொடா்ந்து 4 ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் அரசு தோ்வில் தொடா்ந்து 4 ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரியில் பயிலும் 80 மாணவா்கள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் அரசுத் தோ்வில் 4-ஆவது முறையாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் பாராட்டு தெரிவித்தாா்.
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங் கல்லூரி முதல்வா் புனிதாவயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், கல்லூரி நிதி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.