கன்னியாகுமரி

கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த இக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு ஹோம பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா்,

முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையை தொடா்ந்து யாகசாலையிலிருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து மூலவா் கதிா்வேல் முருகா், விநாயகா், தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், கோயில் நிா்வாக அலுவலா் (பொறுப்பு) சிவகலைப் பிரியா, மண்டகப்படிதாரா்கள் பி.எம்.வி.காளிராஜ், அவரது குடும்பத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT