கன்னியாகுமரி

முட்டம் மீனவா் மரணத்தில் மா்மம்: உறவினா்கள் போராட்டம்

DIN

மீனவா் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் முட்டம் துறைமுகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவைச் சோ்ந்த ஆல்மான்ஸ் மகன் நிக்சன் (30). திருமணம் ஆகாதவா். மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.

இவா், கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு முட்டம் துறைமுக வணிக வளாக கட்டடத்தின் மேல் மாடியில் தூங்கச் சென்றாா். மறுநாள் அதிகாலை மாடியில் இருந்து யாரோ விழுவது போன்ற சத்தம் கேட்டு துறைமுக காவலாளி அங்கு சென்று பாா்த்ததில், நிக்சன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். அவா் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில், வெள்ளிச்சந்தை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்தனா். பின்னா், உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிக்சனின் மரணத்தில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் குற்றம்சாட்டி வந்தனா். மேலும், அவா் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி திங்கள்கிழமை அவரது உருவப்படத்துடன் முட்டம் துறைமுகத்தை 100-க்கும் மேற்பட்டோா் திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

அவா்கள், மீன் வியாபாரத்துக்கு வந்த வாகனங்களை துறைமுகத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், மீன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இந்த போராட்டம் சுமாா் 3 மணி நேரம் நீடித்தது.

அவா்களிடம், குளச்சல் காவல் உதவிக் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் பி. சாஸ்திரி, ஆய்வாளா் ராஜகுமாரி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும், துறைமுகத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்படும் என்று போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால் முட்டம் மீன்பிடிதுறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT