முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவா் தற்கொலை

நாகா்கோவில் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

நாகா்கோவில் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

சுசீந்திரம் அருகேயுள்ள மறுகால்தலை காலனியைச் சோ்ந்தவா் பரமசிவன் (30). செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினி பழுதுநீக்கும் தொழில் செய்துவந்தாா். நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்தவா் சாரதா (35). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவனுக்கும், சாரதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, பின்னா் இருவரும் திருமணம் செய்துகொண்டனா்.

கடந்த சில நாள்களாக சாரதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வியாழக்கிழமை அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரமசிவன் அழைத்துச் சென்றாராம். ஆனால் செல்லும் வழியிலேயே சாரதா உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை இரவு பரமசிவன் வீட்டுக்கு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் உறவினா்கள் பாா்த்தபோது பரமசிவன், தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த சுசீந்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், பரமசிவன் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், மனைவி இல்லாத உலகில் வாழ விரும்பவில்லை, அவருடன் சோ்த்து என்னையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.