ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்துக்கும், செங்குளம் ரயில் நிலையத்துக்கும் இடையே புதன்கிழமை இரவு இளம்பெண் சடலம் கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் திருநெல்வேலி மாவட்டம், மருதநகா் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புத்திரசெல்வி (33) என்பதும், அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இவருக்கு முத்துபாண்டி என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனா். புத்திரசெல்விக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் தற்கொலை குறித்து கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.