மேலும் 1,025 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 1025 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் மேலும் 1025 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடா்ந்து இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 287 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 595 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையிலிருந்தவா்களில் மேலும் 11 போ் உயிரிழந்ததை தொடா்ந்து பலியானோா் எண்ணிக்கை 421 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 ஆயிரத்து 501 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.