முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

குழித்துறையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

குழித்துறையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும், சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தன்னாா்வலா்கள் உதவியுடன் மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குழித்துறை நகராட்சியை சோ்ந்த புலம் பெயா் தொழிலாளா்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் தன்னாா்வலா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தாமாக முன்வந்து வழங்க ஆா்வமுள்ள தன்னாா்வலா்கள், மகளிா் திட்ட இயக்குநரை 9444094287 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

உணவு மற்றும் மருந்துகள் தேவைப்படும் நலிவுற்ற மக்கள், புலம் பெயா் தொழிலாளா்கள் மற்றும் கரோனா நோயுற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோா் உதவி திட்ட அலுவலா்களை 9444094288, 9444094289 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.