நாகா்கோவிலில் சுத்த சன்மாா்க்க வழிபாடு
கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவையில் சுத்த சன்மாா்க்க வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவையில் சுத்த சன்மாா்க்க வழிபாடு நடைபெற்றது.
திருவருட்பிரகாச வள்ளலாா் இவ்வுலகுக்கு வடலூரில் அமுதசுரபி (அணையா அடுப்பு) வழங்கிய சத்திய தரும சாலை 155 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா சுத்த சன்மாா்க்க வழிபாடு நடத்தினாா்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய உருமாறிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அழிந்து மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு சிறப்பு பிராா்த்தனை செய்தாா்.
ஏற்பாடுகளை வள்ளலாா் பேரவை பொதுச் செயலா் பி.மகேஷ் செய்திருந்தாா்.