தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறுப்பனை பாத்திமா தெரு சூசை மகன் புருனோ (52). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சேசையன் மகன் அந்தோணி (45) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை பாத்திமா நகருக்கு சென்ற புருனோவை அந்தோணி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாரம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.