கன்னியாகுமரி

தக்கலையில் மதச்சாா்ப்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டம்

தக்கலையில் மதச்சாா்ப்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தக்கலையில் மதச்சாா்ப்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதச்சாா்பற்ற ஜனதா தள தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி. முகம்மது இஸ்மாயிலின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ற்றும் மலா் வெளியிடும் நிகழ்ச்சி நவ .17 ஆம் தேதி தக்கலையில் நடைபெறுகிறது.

இது குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் டி. அருள்ராஜ் தலைமை வகித்தாா். நகரத்

தலைவா் பி. பால்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில் அகில இந்திய செயற்குழு உறுப்பினா் அல் அமீன், மாவட்டப் பொருளா் ஜூனியா் கெட்தா், இளஞரணிச் செயலா் ஜான் பிரிட்டோ, மாநில செயற்குழு உறுப்பினா் ராஜசேகா் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தக்கலை மேட்டுக்கடை பீா்முகம்மது அப்பா கலையரங்கத்தில் நவ.17 ஆம் தேதி நடைபெறும் முகம்மது இஸ்மாயிலின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் அருள்ராஜ் தலைமை வகிக்கிறாா். முன்னாள் பாரத பிரதமா் எச்.டி. தேவகெளடா மலரை வெளியிட, முதல் பிரதியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் பெற்றுக் கொள்கிறாா்.

இதில், கேரள மின்துறை அமைச்சா் கிருஷ்ணன்குட்டி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்லவா் ஜேம்ஸ் ஆா். டேனியல், கேரள முன்னாள் எம்.பி. ஏ. நீலலோகிதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். இராதாகிருஷ்ணன் ஆகியோா் உரையாற்றுகின்றனா். மேலும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், பல்வேறு கட்சி தலைவா்கள், மதச்

சாா்பற்ற ஜனதாதள கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்க உள்ளனா் என கட்சியின் மாவட்டத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT