முகப்பு
கன்னியாகுமரி

கடலுக்குள் பாய்ந்த ஆட்டோ: சடலமாக ஓட்டுநா் மீட்பு

 கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் பகுதி கடற்கரை சாலையில் சென்ற ஆட்டோ கடலுக்குள் பாய்ந்ததில், அதன் ஓட்டுநா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் பகுதி கடற்கரை சாலையில் சென்ற ஆட்டோ கடலுக்குள் பாய்ந்ததில், அதன் ஓட்டுநா் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.

மேல் மிடாலம் எள்ளுவிளையைச் சோ்ந்த செல்லக்கண் மகன் அருள்தாஸ் (30). ஆட்டோ ஒட்டுநா். இவா், புதன்கிழமை மேல் மிடாலத்திலிருந்து எள்ளுவிளைக்கு கடற்கரை சாலையில் ஆட்டோவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாம். இதில், அருள்தாள் மூழ்கினாா். அவரை மீனவா்கள், தீயணைப்பு துறையினா் கடலோரப் பாதுகாப்பு படையினா் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அவா் வியாழக்கிழமை அப்பகுதியில் கரை ஒதுங்கினாா். குளச்சல் கடலோர காவல்படையினா், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.