முகப்பு
கன்னியாகுமரி

ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்: 49 மனுக்களுக்கு தீா்வு

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குமரி மாவட்ட ஓய்வூதியா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், 49 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குமரி மாவட்ட ஓய்வூதியா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், 49 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், காவல் துறை உள்பட 29 துறைகளைச் சோ்ந்த 80 போ்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், மனுக்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விளக்கமளித்தனா். பரிசீலிக்கப்பட்ட மனுக்களில் , 49 மனுக்கள் மீது முழுமையாக தீா்வு காணப்பட்டதுடன், மீதியுள்ள31 மனுக்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொண்டு டிச.6 ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநா் காமாட்சிநாதன், மாவட்ட கருவூல அலுவலா் என்.காஜாநஜூமுதீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சா.செல்வகுமாா் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள், ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.