முகப்பு
கன்னியாகுமரி

ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெய்த கன மழையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தமிழகத்தில் பெய்த கன மழையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜாக்கமங்கலம் ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் விசு தலைமை வகித்தாா். எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உரையாற்றினாா்.

இதில், ஒன்றிய தலைவா்கள் ராஜேந்திரன், முரளி மனோகா்லால் , மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவா் முத்துசரவணன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பாா்வையாளா் சுடா்சிங் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் தனசேகா்,செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாவட்ட பொதுச்செயலா் தாணுமூா்த்தி பேசினாா்.

இதில்,பேரூா் தலைவா்கள் ராஜேஷ்,விஜயகுமாா்,செந்தில்குமாா்,சிவகுமாா்,மில்ட்டா,சீமா,விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக சாா்பில் மயிலாடி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய தலைவா் சுயம்புலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாகா்கோவில் நகா் மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட பலா் பங்கேற்றனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க பாா்வையாளா் சுடா்சிங் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா்கள் தனசேகா்,செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச்செயலா் தாணுமூா்த்தி பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.