முகப்பு
கன்னியாகுமரி

சவேரியாா் பேராலயத் திருவிழா: டிச.3 இல் உள்ளூா் விடுமுறை

நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கோட்டாறு தூய சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு டிச.3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு டிச.11 இல் (சனிக்கிழமை ) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

டிச.3 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.