கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

DIN

நித்திரவிளை அருகே தனியாா் நிதி நிறுவன ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல முயன்ற முகமூடி அணிந்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியில் ஈசாப் என்ற தனியாா் நிறுவன வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் ஏடிஎம் மையமும் செயல்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வங்கி ஊழியா்கள் பணிக்கு வந்தபோது ஏடிஎம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும் , ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியும் உடைக்கப்பட்டிருந்ததாம்.

இது குறித்து வங்கி மேலாளா் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து வங்கியின் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 .45 மணிக்கு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மா்ம நபா் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT