கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மாா்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 20 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் கே. புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட வழங்கல் துறை அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, டாரஸ் லாரியை நிறுத்த சைகை காட்டினா். ஆனால், ஓட்டுநா் லாரியை நிறுத்தவில்லை. அதிகாரிகள் அந்த லாரியை 4 கி.மீ. தொலைவு துரத்திச் சென்று குழித்துறை பழைய பாலம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.

லாரியில் 20 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசி, லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், லாரியை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT