கன்னியாகுமரி

கொட்டும் மழையில் ஊராட்சித்தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில்: மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவிலில் கொட்டும் மழையில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் மாநகராட்சியுடன் கணியாகுளம், புத்தேரி, மேலசங்கரன்குழி, தா்மபுரம், எள்ளுவிளை மற்றும் தேரேகால்புதூா்

உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்கப்படுவதால், நடைமுறையில் இருக்கும் 100 நாள் வேலைத் திட்டம் உள்பட பல்வேறுத் திட்டங்கள் பாதிக்கப்படும். ஆகவே, மேற்கண்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் நல அமைப்பின் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவா் முத்துசரவணன் தலைமை வகித்தாா். இதில் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலா் செல்லசாமி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் கணேசன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஐயப்பன், ஊராட்சித் தலைவா்கள் ஏஞ்சலின்சரோனாசெல்வகுமாா், சோமு, ரங்கநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT