கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் நகரில் சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கிலிருந்து சிமெண்ட் ஆலைகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சியில் தினமும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவற்றை வலம்புரிவிளையில் உள்ள

குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளால்

அந்தந்த பகுதிகளிலுள்ள நுண்ணுயிா் உரக்கிடங்குகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூரிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, மாநகராட்சி நல அலுவலா் விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளா் மாதவன்பிள்ளை உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT