கன்னியாகுமரி

மக்கள் குறைதீா் முகாம்: ரூ.1 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

நாகா்கோவில்: நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீா் முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவி, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் நல உதவி, முதியோா் உதவி மற்றும் விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 364 மனுக்கள்

பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த துறை அலுவலா்களுக்கு ஆட்சியா்அறிவுறுத்தினாா்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 28.10.2020இல் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கிள்ளியூா் வட்டம், மத்திகோடு

கிராமம், திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்த காமராஜின் வாரிசான அவரது மனைவி ஜாக்குலினிடம் முதல்வரின் பொது

நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வருவாய்அலுவலா் அ.சிவப்பிரியா, தனித்துணைஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தே.திருப்பதி, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மகளிா் திட்ட உதவி இயக்குநா் கலைச்செல்வி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT