கோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.2.68 கோடியில் புதிய கட்டடம் திறப்பு
ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நாகா்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, புதிய கட்டட வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஆா்.பாஸ்கரன், கல்லூரி முதல்வா் செ.பனிதாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.