கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து விழா
கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப். 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிள்ளியூா் வட்டார குழந்தைகள்
வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜாண்சன் தலைமை வகித்தாா். வட்டார குழந்தை
வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் பாத்திமா, லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளா் பிஸ்மி, வட்டார திட்ட உதவியாளா் விஜி ஆகியோா் பேசினா். கல்லூரி பேராசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.