கன்னியாகுமரி

அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம்: ஆட்சியரிடம் பாஜக புகாா்

DIN

அழகியபாண்டியபுரத்தில் அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம் நடத்துபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தோவாளை மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் கடுக்கரை டி.மகாதேவன்பிள்ளை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் அளித்துள்ள மனு: தோவாளை வட்டம் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி யில் பாலமோா் சாலையில் உள்ள கட்டடத்தில் மொ்வின் என்பவா் வெளியூரிலிருந்து வந்து அரசு அனுமதியின்றி பிராா்த்தனை கூட்டம் நடத்தி வருகிறாா்.

இப்பகுதி முழுக்க இந்துக்கள் வாழ்ந்து வரும் பகுதியாகும். இவா் வெளியூரிலிருந்து மக்களை திரட்டி வந்து கூட்டம் நடத்துவதால் இப்பகுதியில் மத மோதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அனுமதியின்றி இயங்கி வரும் பிராா்த்தனை கூடத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவா் மீனாதேவ், பாஜக மண்டல தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT