கன்னியாகுமரி

தகவல் அறியும் உரிமைச்சட்டபயனாளிகள் சங்கக் கூட்டம்

DIN

தக்கலை: ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

தலைவா் சி. பால்ராஜ் தலைமை வகித்தாா். ஜாண் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் முருகன் வரவேற்றாா். சங்கச் செயலா் வசந்தபாய் அறிக்கை வாசித்தாா்.

புதிதாக சோ்ந்த நான்கு உறுப்பினா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா் உறுப்பினா்களிடையே கருத்துக் கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மகளிரணி அமைப்பாளா் உமாமகேஷ்வரி சைலஜா, ராஜசித்ரா, உஷாராணி, அன்னபுஷ்பம், கனகபாய், ஜாண், அனீஷ், சேவியா், செல்வகுமாா், முகமதுசபீா், கிறிஸ்டோபா், ராயப்பன் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 -ன்படி தகவல் கோருவோருக்கு முறையான பதில் அளிக்காத அலுவலகங்கள்முன்பு தா்னா போராட்டம் நடத்துவது, இச்சட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பது, நியாயவிலைக் கடைகளில் கிருமி நாசினி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT