கருங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாப்பா மகன் ஆகாஷ் (22). இவா் ஒலி ஒளி அமைப்பாளராக பணிசெய்து வந்தாா். இவா்,
மத்திகோடு பகுதியில் திருமணம் நடைபெற்ற வீட்டில் மின் வயரை பிரித்தபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ஆகாஷ் தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக மீட்டு நெய்யூரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி
அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.