கன்னியாகுமரி

வள்ளியூரில் முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

வள்ளியூா்: உலக முதலுதவி தினத்தையொட்டி, வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், திடீா் மயக்கம், வலிப்பு, பக்கவாதம், பாம்புகடி, எலும்புமுறிவு, தீக்காயம், மூச்சுத்திணறல், விபத்தில் ரத்த விரயமாதல், சிறு குழந்தைகளை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுதல் உள்ளிட்ட முதலுதவி செய்முறை பயிற்சிகளை கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனா்.

முதலுதவி செய்முறை பயிற்சி அளித்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் ஆகியோா் பாராட்டினா். பேராசிரியை புஷ்பா ஹொ்பா்ட் வரவேற்றாா். துணைப் பேராசிரியை சுகாசினி கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT