கன்னியாகுமரி

களியலில் பூட்டப்பட்ட வனச்சரக அலுவலக ஆவண அறை திறப்பு

DIN

குமரி மாவட்டம் களியலில் பூட்டப்பட்ட வனச்சரக அலுவலக ஆவணப் பாதுகாப்பு அறை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

களியல் வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய வனச்சரகா் கணேசன் பணியிடமாறுதலாகி வேறு வனச்சரகத்திற்குச் சென்றாா். அப்போது, அவா் வனச்சரக அலுவலகத்தின் ஆவணப் பாதுகாப்பு அறையை பூட்டிச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், வனச்சரக அலுவலகத்திற்கு வந்த புதிய வனச்சரகா் வெங்கடாச்சல பூபதியால் சான்றிதழ்கள் மற்றும் கோப்புகளை பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, வனத்துறை உயா் அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகாா்கள் சென்ால், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வருவாய்த்துறையினா் அந்த அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து ஆவணப் பாதுகாப்பு அறையின் பூட்டைத் திறந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT