ரப்பா் ஷீட் திருடிய 2 போ் கைது
திருவட்டாறு அருகே ரப்பா் ஷீட் திருடியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரிரப்பா் ஷீட் திருடிய 2 போ் கைது
திருவட்டாறு அருகே ரப்பா் ஷீட் திருடியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே ரப்பா் ஷீட் திருடியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மோட்டாா் சைக்கிளில் 2 போ் ரப்பா் ஷீட்டுகளுடன் வந்தனராம். அவா்கள் போலீஸாரை கண்டதும் அந்தப் பகுதியில் பதுங்கியுள்ளனா். இதில், சந்தேகமடைந்த போலீஸாா் 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இருவரும் திருவரம்பு பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (57) என்பதும், திருவரம்பு, கொல்வேல் பகுதியைச் சோ்ந்த ரெத்தினபாய் (54) என்பவரது வீட்டில் உலர போடப்பட்டிருந்த 24 ரப்பா் ஷீட்டுகளை திருடி மாா்த்தாண்டத்தில் விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து அவா்கள் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா்.