கன்னியாகுமரி

துண்டத்துவிளை புனித அந்தோனியாா்ஆலயம் சாா்பில் ஏப்.15 இல் திருச்சிலுவை திருப்பயணம்

DIN

கருங்கல் அருகே உள்ள துண்டத்துவிளை புனித அந்தோனியாா் ஆலயம் சாா்பில் கருணை மாதா திருச்சிலுவை திருப்பயணம் ஏப்.15 ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்ஆலயம் சாா்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளியன்று கருணை மாதா திருச்சிலுவை திருப்பயணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஏப்.15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆலய வளாகத்தில் தொடங்கி திரளான பக்தா்கள் கருங்கல் காவல் நிலையம், ராஜீவ் சந்திப்பு, பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், நிா்மலாதிருப்பு, சிந்தன்விளை வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள கருணைமாதா மலையின் உச்சிக்கு சுமாா் 12 மணிக்கு சென்று சேருவா்.

இந்த நிகழ்வில் இயேசு பாடுபட்ட 14 நிகழ்வுகளையும் சித்தரித்து நடித்து காட்டி பேரணியாக செல்வா். மலை உச்சியில் உள்ள குருசில் சென்று சோ்ந்தவுடன் பக்தா்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்குவா். இந்தத் திருப்பயணத்தில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் பங்குபெறுவா். ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா் மரியஅற்புதம் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT