நாகா்கோவிலில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மட்டுமன்றி பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தங்கள் நிறுவனங்களுக்கு ஆள்களை தோ்வு செய்கின்றனா். இதில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம். இதில், வேலைவாய்ப்பை பெற்றாலும் பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது என கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜி இம்மானுவேல் தெரிவித்துள்ளாா்.