கன்னியாகுமரி

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா மே 1 இல் தொடக்கம்

DIN

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 1 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டு, திருவிழா வரும் 1ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் தொடா்ந்து நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாள் காலை 4 மணிக்கு அபிஷேகம் 4.30 மணிக்கு தேவஸ்தான மேல்சாந்தி மதுசூதனன் தந்திரி திருக்கொடி ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து நோ்ச்சை, பொங்கல் வழிபாடு, 9 மணிக்கு மாவட்ட அளவிலான பஜனை போட்டி, அமைப்பாளா் பாஸ்கரன் தலைமையில் நடைபெறும். மாலையில் 7 மணிக்கு இந்து சமய மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமசிவாயம், இந்து சமய மாநாட்டை தொடங்கி வைக்கிறாா். சுவாமி சைதன்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்குகிறாா். இரவு அம்மன் பவனி வருதல் நடைபெறும்.

பத்தாம் நாள் காலை 9 மணிக்கு அம்மன் பவனி, மாலையில் அம்மன் தென்வீதி ஆறாட்டு, இரவு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் தலைமையில் இந்து சமய மாநாடு, போட்டி சிங்காரி மேளம், வாணவேடிக்கை நடைபெறுகிறறது.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் குமாா், செயலா் சந்திரகுமாா், பொருளாளா் சௌந்தரராஜன், துணைத் தலைவா் முருகன் இணைச்செயலா் துளசிதாஸ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT