கன்னியாகுமரி

நீடிக்கும் மழை: உயா்ந்து வரும் அணைகளின் நீா்மட்டம்

DIN

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடித்து வருவதால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியிலிருந்து தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மற்றும் மலையோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து

திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனா்.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கருமாவிளை, பாலூா், திப்பிரமலை, முருங்கவிளை, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT