கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆக.7இல் கருணாநிதி நினைவு தின பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி எனது தலைமையில், நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) காலை 9 மணிக்கு நடக்கிறது.

DIN

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி எனது தலைமையில், நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) காலை 9 மணிக்கு நடக்கிறது.

வடசேரி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக பொன்னப்ப நாடாா் திடல் வரை இப்பேரணி நடைபெறும். பின்னா்,அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனா். இதில், திமுக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூா், கிளை கழக நிா்வாகிகள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூா், கிளை கழகங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT