முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறையில் வாகன சோதனையின் போது கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:48 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

குழித்துறையில் வாகன சோதனையின் போது கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையில் போலீஸாா் குழித்துறையில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்கு பதிவு செய்து, காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காா் ஓட்டுநா் இளஞ்சிறை, பண்டாரவிளை டேவிட் மகன் சலீமை(40) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.