அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். இதில், துணைத்தலைவா் சண்முவடிவு, வட்டார வளா்ச்சி அலுவலா் த.புஷ்பரதி, துணை அலுவலா் நீலபாலகிருஷ்ணன், கவுன்சிலா்கள் அருண்காந்த், ராஜேஷ், பிரேமலதா, ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மகாதானபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டடங்கள் பராமரிப்பு செய்தல், சுவாமிதோப்பு ஊராட்சி காமராஜபுரத்தில் பழுதடைந்த சுயஉதவிக்குழு கட்டத்தை இடித்து அகற்றுவது, கரும்பாட்டூா் ஊராட்சி சித்தன்குடியிருப்பு பழுதடைந்த நூலக கட்டடம் இடித்து அகற்றுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.